• குண்டுகள் பல்குழல் எவையும் தகர்கமுடியாத தமிழனின் சொத்து  எங்கள் குருதுயின் ஈரம் காயலாம் வீரம் காயாது
  • உன் கண்ணால என்ன பார்கிரதவிட என் கண்ணால உன்னோட இருந்து என்ன பார்க்க ஆசை
  • என்னை சுற்றி வளைத்தாய் என்னுள் ஆழ ஊடுருவி தாக்கினாய் பின்னேறி செல்கிறாய் ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்......?????

சீமான் ரத்த சரித்திரம்

சீறி பாயும் காளை
என நினைதேன்
சீக்கிவிளுந்த கோழி
என நிருபித்துவிட்டார்
ரத்த சரித்திரத்தில்

முடியவில்லை

உன் கண் பார்த்து
பேச முடியவில்லை
காதல்
எல்லாவற்றையும் மறைக்கிறது

தவறு

தவறுகள் செய்ய
பழகிவிட்டேன்
திருந்துவதற்காக

தற்கொலையாளி

முன்பின் பார்த்ததில்லை
மூன்று நாள் பழகியதில்லை
முகம் பார்த்து ஞாபகமில்லை
கண்டதும் கட்டி அணைத்துவிட்டேன்
இலக்கு முடிந்துவிடேன்
இவ்வுலகை விட்டு பிரிந்துவிட்டேன்

வருடங்கள்

நீ
இல்லாதவற்றை
நொடிகள் என்பதை
விட
வருடங்கள் என்பதே
மேல்

நிஜம்

ராமர்கள் ராவணர்களாக
வாழ்கின்றார்கள்
ராவணர்கள் ராமர்களாக
சித்தரிகப்படுகின்றார்கள்

சுடுகாடு

பக்கத்துக்கு வீட்டில செத்த வீடு
எண்டா எண்டா எங்க அம்மா
சத்தமா வானொலி கூட போட
விடமாட்டாங்க
ஆனா இங்க DTS எபக்ட்

அறியாமை


தாய்பால் கொடுக்காத
தாய்
விரல் சூப்பும்
குழந்தையை
தடுக்கிறாள் ......?????

மன்னிப்பு

தமிழில் பிடித்த
வார்த்தை
எனக்கும் உனக்கும்
ஏற்படும்
செல்ல கலவரங்களின்
முடிவு
மன்னிப்பு
sorry .... sorry .........

சூதாட்டம்


ஆண்கள் ஆடும்
காதல் சூதாட்டத்தில்
பெண்கள் காகித
அட்டைகள்
கற்பு
இழக்கப்படும்
கைகாசு

நியாயம்

உடனடி கோபம்
சிலகாலம்
கழிந்து
நியாயம்

காதல்


புரிய வேண்டிய
விடயம்
புரிய வைக்க பட
வேண்டிய
விடயம் அல்ல

பார்வை


உன் கண்ணால
என்ன பார்கிரதவிட
என் கண்ணால
உன்னோட இருந்து
என்ன பார்க்க ஆசை

வீரம்


குண்டுகள் பல்குழல்
எவையும் தகர்கமுடியாத
தமிழனின் சொத்து

எங்கள் குருதுயின்
ஈரம் காயலாம்
வீரம் காயாது


வரி


மோட்டார் வாகனங்களுக்கு
50 % வரிவிலக்கு
மோட்டார் குண்டடிபட்ட
எம் உறவுகளை பற்றி
ஒரு வரி கூட
செய்தி இல்லை

வெசாக்


ஞானம் கிடைத்தது
புத்தருக்கு மட்டும்தான்
அவரை வழிபடுபவர்களுக்கு
அல்ல .......

ஏன்ன்ன் ????


என்னை சுற்றி வளைத்தாய்
என்னுள் ஆழ ஊடுருவி தாக்கினாய்
பின்னேறி செல்கிறாய்
ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்......?????

என் கொலுசு ஓசையை ரசிக்கும் காதுகள்

Related Posts with Thumbnails
 
அ... ஆ... © 2010 | Designed by அன்பே ஆருயிரே | Back to top