• குண்டுகள் பல்குழல் எவையும் தகர்கமுடியாத தமிழனின் சொத்து  எங்கள் குருதுயின் ஈரம் காயலாம் வீரம் காயாது
  • உன் கண்ணால என்ன பார்கிரதவிட என் கண்ணால உன்னோட இருந்து என்ன பார்க்க ஆசை
  • என்னை சுற்றி வளைத்தாய் என்னுள் ஆழ ஊடுருவி தாக்கினாய் பின்னேறி செல்கிறாய் ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்......?????

கவிதை


வானம்
நீலம்
கடல்
நீ
நான்
காற்று

அகதி / ஏதிலி



அகராதியில் தேடவில்லை
அன்று 1995
புத்தகப்பையுடன்
இரவோடு இரவாக
முடிவிடம் எங்கு
என்று தெரியாத பயணம்.
அர்த்தம் தெரியவில்லை
புரிந்துகொண்டேன் அன்று
நானும் ஒரு அகதி(ஏதிலி) என்று


குறிப்பு :
அகதியை ஏதிலி என்றும் கூறலாம் நல்ல தமிழ் ..
அகதி ஒரு இளக்காரமா சொல் , அகதி என்று பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது

கூழ்


யாழ்
மீட்டிய
வாள் ஏந்திய
கரங்கள் கூழுக்காக
கை ஏந்துகின்றன

நொடி

உனை நினைத்த
நொடிகளை விட
மறக்க நினைத்த
நொடிகளே அதிகம்

விருது

கொடுக்க ஒரு
மனம் வேண்டும்
எடுக்க ஒரு
மனம் வேண்டும்

விருது பெற்ற அனைவர்க்கும் வாழ்த்துக்கள்

நட்பு

நட்பு எதிர்பார்ப்பிலாமல்
வருவது
காதல் எதிர்பார்ப்பில்
பிறப்பது

மழை

தலைநகரில் கொண்டாட்டம்
வன் முழுவதும் கருமேகம்
இந்தநாள்
பெய்தது மழை அல்ல
போனவருடம்
முள்ளி வாய்காலில்
நம்முறவுகளின்
கண்ணீரும் சென்நீரும்தான்

முள்ளிவாய்கால்

முள்ளிலும் கூட
மலர் இருக்கும்
எங்கள் முள்ளிவாய்காலில்
முள்ளும் இல்லை
மலரும் இல்லை
உறவுகளின் உடலும்
உதிரமும்தான்
உண்டு தமிழனின்
வரலாறு சொல்ல

முள்ளிவாய்கால் ஷஸ்னி!

கல்யாணம்


நம் காதலுக்கு
மூடுவிழா
நம் ஆசைக்கு
முடி சூட்டு விழா

கருணாநிதியின் செம்மொழி மாநாடு


ஆண்டி குண்டியை தட்டினால் பறப்பது சாம்பல்

நன்றி :
ஈழத்து கவிஞ்ஞர் மாமனிதர் புதுவை இரத்தினதுரை

ஐயா அன்று நீங்கள் எழுதியது இன்று ஞாபகம் வருகிறது

செம்மொழி


உயிருள்ள தமிழன் இறக்கும் போது
குரல் கொடுக்க வக்கில்லை
உயிர் அற்ற தமிழுக்கு
இத்தனை குரலா??

ஈழதமிழரின் உதிரம் கொண்டு
அமுதத் தமிழ் மொழி
செம்மொழி ஆகிறது


குறிப்பு
இரத்த தானம் செய்வோம்
செம்மொழி மாநாட்டை புறகணிப்போம்

பூகம்பம்


சில இறுக்கமான
தருணங்களில்
உன் அதிர்வுகள்
எனக்குள் பூகம்பத்தை
ஏற்படுத்தும்

அணைப்பு

தடக்கி
விழும் போதெல்லாம்
தாவி அணைப்பது
நீ மட்டும் தான்

சுனாமி

எப்போதும்
கடல் கரைக்கு செல்லும் போது
தாக்குகிறது சுனாமி
என் சுனாமி நீ தானே ???

பட்டாம்பூச்சி


உன் கையில்
இருக்கம் பட்டாம்பூச்சி
நான்
கசக்கி விடாதே

காதல்


சிலருக்கு பிச்சை
சிலருக்கு கொச்சை
சிலருக்கு இச்சை
சிலருக்கு சர்ச்சை

கை


உன்னை மட்டுமே
கட்டி தழுவும்
காட்டி கொடுக்காது
இந்த கை

குடை



குடைக்குள் காதல்
வளர்க்கும்
காதலர்களும்
காகங்கள் தான்

படம் :
நன்றி - முனைவர் இரா.குணசீலன்

நிஜம்


ஏதிலிகள்
முள் வேலிக்குள்
காதலிகள்
முட் புதருக்குள்

மௌனம்


உன் முன்
இருக்கும் போது
மௌனமாகிறேன்
நீ இடைவிடாது பேசிக்கொண்டு
இருப்பதனால்

என் கொலுசு ஓசையை ரசிக்கும் காதுகள்

Related Posts with Thumbnails
 
அ... ஆ... © 2010 | Designed by அன்பே ஆருயிரே | Back to top